“அறிவு” படக்குழு வெளியிட்ட ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டர்

‘அறிவு’ படம் பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
“அறிவு” படக்குழு வெளியிட்ட  ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டர்
Published on

நடிகர் உறியடி விஜயகுமார் நாயகனாக நடிக்கும் ‘அறிவு’ திரைப்படத்தின் ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.

சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய் குமார் புதிய படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'அறிவு' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு டி. இமான் இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடித்துள்ளர்.

மோட்டிவ்ட்ரோன் புரொடக்சன் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படம் பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனால், ‘அறிவு’ திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விஜயகுமார், கயல் ஆனந்தி நடிக்கும் ‘அறிவு’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் நாளான இன்று ‘அறிவு’ திரைப்படத்தின் ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கருப்பு வெள்ளை போஸ்டரில் மலைவாழ் பெண்கள் இடம்பெற்றுள்ளதால் இப்படல் மலை கிராமங்களில் கல்வியைக் கொண்டு செல்லும் நாயகனின் கதையாக உருவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com