அர்ஜுன் தாஸின் ‘கான்சிட்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


அர்ஜுன் தாஸின்  ‘கான்சிட்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
x
தினத்தந்தி 19 Jan 2026 6:54 PM IST (Updated: 19 Jan 2026 6:57 PM IST)
t-max-icont-min-icon

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் ‘கான்சிட்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சென்னை,

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார்.அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி, பாம் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

அர்ஜுன் தாஸ் அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இமையமைக்கிறார்.

நகரத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் உணர்ச்சிகளை விவரிக்கும் கதைக்களம் என்றும், நிச்சயம் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் என்றும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மங்களூரு, சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இதுவரை சுமார் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘கான்சிட்டி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாடல்கள், டிரெய்லர், ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Related Tags :
Next Story