நீங்கள் நினைப்பது போல் இல்லை; நாங்கள் இருவரும் நண்பர்கள் தான்...!- ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்

ஐஸ்வர்யா லட்சுமி, தனது இணையப் பக்கத்தில் முந்தைய பதிவிற்கு விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நீங்கள் நினைப்பது போல் இல்லை; நாங்கள் இருவரும் நண்பர்கள் தான்...!- ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்
Published on

சென்னை

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழில் 'ஆக்ஷன்' 'ஜகமே தந்திரம்' 'கார்கி' படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். குறிப்பாக, பொன்னியின் செல்வனில் 'பூங்குழலி' கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களைப் பெருமளவு கவர்ந்தது.

சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தில் ஆகஷன் காட்சிகளில் நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி 'கைதி', 'மாஸ்டர்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் அர்ஜுன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை 'இதய' குறியீடுடன் பகிர்ந்துள்ளார். இதனால் , இருவரின் ரசிகர்களும் 'காதலுக்கு வாழ்த்துக்கள்' என கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி, தனது இணையப் பக்கத்தில் முந்தைய பதிவிற்கு விளக்கமளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நண்பர்களே எனது கடைசி பதிவு இவ்வளவு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்திக்க நேர்ந்தது, அதனால் ஒரு படத்தை கிளிக் செய்து பதிவிட்டேன். நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். நேற்று முதல் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து அர்ஜூன் தாஸ் ரசிகர்களுக்கு "அவர் உங்களுடையவர்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com