'டில்லியின் வாழ்க்கையில் என்ன நடந்தது?' - 'கைதி 2' படம் குறித்து அர்ஜுன் தாஸ் கூறியது என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019ல் வெளியான திரைப்படம் கைதி.
'டில்லியின் வாழ்க்கையில் என்ன நடந்தது?' - 'கைதி 2' படம் குறித்து அர்ஜுன் தாஸ் கூறியது என்ன?
Published on

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக கடந்த 2019ல் வெளியான திரைப்படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. நடிகர் கார்த்தி மனதில் நிற்கும்படியான ரோலில் நடிக்க கதாநாயகி, பாடல் என எதுவுமே இல்லாமல், கார்த்தியை இதற்குமுன் பார்த்திடாத ஒரு பரிணாமத்தில் காட்டிய படம் கைதி. இப்படத்தில் டில்லி கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்தார். மாநகரம் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது திரைப்படமாக கைதி வேற லெவல் ஹிட்டு கொடுத்தது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் அன்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கைதி 2 படம் குறித்து பேசினார். அப்போது அவர், கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் டில்லியின் வாழ்க்கையில் என்ன நடந்தது, அடைக்கலம் மற்றும் அன்பு எப்படி டில்லி வாழ்க்கையில் வருகிறார்கள் என்பது தெரியும். இவ்வாறு கூறினார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு கைதி 2 படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com