புதிய கெட்டப் : விடாமுயற்சி படக்குழுவுடன் இணைந்த அர்ஜுன்

நடிகர் ஆரவ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
புதிய கெட்டப் : விடாமுயற்சி படக்குழுவுடன் இணைந்த அர்ஜுன்
Published on

சென்னை,

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் ' விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு நடிகர் அஜித் சென்னை திரும்பினார். பின்னர் மீண்டும் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றார். அப்போது அஜித்துடன் நடிகை திரிஷாவும் சென்ற வீடியோ வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இதன் மூலம் திரிஷா இந்த படத்தில் நடிப்பது உறுதியானது.

இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளார். நடிகர் ஆரவ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அஜித் மற்றும் அர்ஜுனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புதிய கெட்டப்பில் அர்ஜுன் இருக்கும் புகைப்படம் சமுக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் நடித்திருந்தார். இந்த கூட்டணி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com