தெலுங்கில் அறிமுகமாகும் மகளுடன் பழம்பெரும் நடிகரை சந்தித்த அர்ஜுன்

நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மற்றும் டைரக்டர் கே.விஸ்வநாத்தை சந்தித்து ஆசிப் பெற்றுள்ளார்.
தெலுங்கில் அறிமுகமாகும் மகளுடன் பழம்பெரும் நடிகரை சந்தித்த அர்ஜுன்
Published on

நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக வளர்த்து விடும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். தமிழில் விஷால் ஜோடியாக பட்டத்து யானை படத்தில் ஐஸ்வர்யா நடித்து இருந்தார்.தமிழ், கன்னட மொழிகளில் தயாரான சொல்லி விடவா படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கிலும் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக அர்ஜுன் அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்தை அர்ஜுனே இயக்குகிறார். ஏற்கனவே சேவகன், பிரதாப், தாயின் மணிக்கொடி, ஜெய்ஹிந்த் 2 ஆகிய படங்களை அர்ஜுன் இயக்கி உள்ளார். தற்போது மகளுக்காக தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். இதில் கதாநாயகனாக விஷ்வக் சென் நடிக்கிறார். ஜெகபதிபாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

 இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா, ஐதராபாத்தில் பிரபல டைரக்டர் கே.விஸ்வநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார், பின்னர் பழம்பெரும் நடிகரும், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவையும் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அர்ஜுனும் உடன் இருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com