'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி நிச்சயம் உங்கள் மனதில் இடம் பிடிக்கும்' - நந்தமுரி கல்யாண் ராம்


Arjun S/o Vyjayanthi will be remembered for a long time – Kalyan Ram
x

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி கல்யாண் ராம். இவர் தற்போது 'அர்ஜுன் சன் ஆப் வைஜெயந்தி' என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை விஜயசாந்தி, நடிகர்கள் சோஹல் கான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் வருகிற 18-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார்.

அந்த விழாவில் பேசிய நந்தமுரி கல்யாண் ராம், "நாம் அனைவரும் ஏராளமான திரைப்படங்களைப் பார்க்கிறோம். சில படங்கள் வெற்றி பெறுகின்றன, சில படங்கள் தோல்வியடைகின்றன. ஆனால் சில படங்கள்தான் நம் மனதில் இடம் பிடிக்கும். அர்ஜுன் சன் ஆப் வைஜயந்தி நீண்ட காலம் நம் நினைவில் இருக்கும். அதை நான் உறுதியாக சொல்கிறேன்' என்றார்.

1 More update

Next Story