அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் திருமணத்தின் சங்கீத் விழா: சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் திருமணத்தின் சங்கீத் விழா மும்பையில் நடைபெற்றது.
image courtesy: ANI
image courtesy: ANI
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு டிரேட் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஐபிஎல் தொடருக்கு முன்பாக திருமணத்தை நடத்தி வைக்க தந்தை சச்சின் முடிவு செய்தார். ஏற்கனவே அர்ஜுன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாகவே தனது அக்கா சாரா டெண்டுல்கர் அவர்களின் தோழியான சானியா சந்தோக் உடன் காதலில் இருந்து வந்தார்.

சானியா சந்தோக் பிரபல தொழிலதிபர் ரவி காய் அவர்களின் பேத்தியாவார். இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதமே அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் இணையின் நிச்சயதார்த்தம் நிறைவடைந்தது.

திருமணம் மார்ச் 5-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், சச்சின் டெண்டுல்கர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தார்.

நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. அந்த வகையில், அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் திருமணத்தின் சங்கீத் விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com