தொழில் நிறுவனம் தொடங்கிய அர்ஜூன் மகள்

நடிகர் அர்ஜுனின் 2-வது மகள் அஞ்சனா தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
தொழில் நிறுவனம் தொடங்கிய அர்ஜூன் மகள்
Published on

தமிழ் சினிமாவில் 90-களில் கதாநாயகனாக கலக்கியவர்களில் ஒருவர் அர்ஜூன். இவரது படங்களில் அதிரடி சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. இதனாலேயே 'ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் 'பட்டத்து யானை', 'சொல்லிவிடவா' போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுனின் 2-வது மகள் அஞ்சனா. இவரும் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். உண்ணும் பழங்களின் தோல்களைக் கொண்டு செய்யப்பட்ட 'ஹேண்ட்பேக்'குகளை தயாரிக்கும் நிறுவனத்தை ஐதராபாத்தில் அவர் தொடங்கி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு நடிப்பதில் பெரிய விருப்பமில்லை. என் கவனம் முழுவதும் சிறப்பாக ஒரு தொழிலை ஏற்று செய்ய வேண்டும் என்பதுதான். அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன்" என்றார்.

அர்ஜூன் இது பற்றி கூறும்போது, "எப்போதுமே எனது மகள்களிடம் நடிப்பு துறைக்கு வரும்படி நிர்பந்தித்தது கிடையாது. அப்படி செய்யவும் மாட்டேன். ஆனால் அவர்களது வாழ்க்கை பாதைக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருப்பேன். அவர்கள் விருப்பத்துக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com