விரைவில் திரைக்கு வரும் அர்ஜுன் இயக்கிய 'சீதா பயணம்'

ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கி வரும் 'சீதா பயணம்' படத்தின் படப்பிடிப்பு பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
விரைவில் திரைக்கு வரும் அர்ஜுன் இயக்கிய 'சீதா பயணம்'
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் 1992-ல் வெளியான 'சேவகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 'ஜெய் ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம், ஏழுமலை' என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கியிருந்தார். இந்தநிலையில் 6 வருடங்களுக்குப்பின் தற்போது மீண்டும் இயக்குனர் ஆகிறார் அர்ஜுன். அவர் இயக்கும் புதிய படத்துக்கு 'சீதா பயணம்' என பெயரிடப்பட்டுள்ளது. தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 

நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் சில சண்டை காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் திரைப்படம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com