"விஜய்யை கைது செய்க" - நடிகை ஓவியா


விஜய்யை கைது செய்க - நடிகை ஓவியா
x
தினத்தந்தி 28 Sept 2025 12:44 PM IST (Updated: 28 Sept 2025 12:54 PM IST)
t-max-icont-min-icon

விஜய்யை கைது செய்ய வேண்டுமென நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார்.

சென்னை,

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விஜய்யை கைது செய்ய வேண்டுமென நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார். இது உடனடியாக இணையத்தில் பரவியநிலையில், அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து அவர் அந்த ஸ்டோரியை நீக்கிவிட்டார். தற்போது அவர், தனக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கமெண்ட்களை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தமிழகத்தையே உழுக்கியுள்ளநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story