இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்க்கும் அருள்நிதி.. வெளியான முக்கிய தகவல்

அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிமான்டி காலனி 2' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்க்கும் அருள்நிதி.. வெளியான முக்கிய தகவல்
Published on

சென்னை,

அருள்நிதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். 'வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டிமான்டி காலனி 2' படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது பம்பர் படத்தின் இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்திலும், தேன் படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர் தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கொம்பன் படத்தினை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வெளியான தகவல் என்னவென்றால் இப்படத்திற்கு 'ராம்போ' என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com