

அருள்நிதியின் ‘டிமான்ட்டி காலனி 3’ படத்திற்கு தணிக்கை வாரியம் “ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது.
அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி 2’. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி’ படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, ரிலீசுக்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தன.
இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் ரூ. 50 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுவே அதிக ஓடிடி தொகைக்கு விற்பனையான முதல் தமிழ் ஹாரர் திரைப்படம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாக 3 ஆம் பாகத்தின் வெளியீட்டுக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள சூழலில், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்திற்கு ‘ஏ’ (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், வன்முறை நிறைந்த ஆக்சன் திரைப்படமாக ‘டிமான்டி காலனி 3’ ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்க தயாராகியுள்ளது.