அருண் விஜய் 36-வது படத்தின் டைட்டில் இன்று வெளியீடு

அருண் விஜய் 36-வது படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அருண் விஜய் 36-வது படத்தின் டைட்டில் இன்று வெளியீடு
Published on: 

தமிழ் சினிமாவில் தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். ஏ. எல் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் மிஷன் சாப்டர் -1. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வசூலித்திருந்தது.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் அருண் விஜயின் படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று மாலை வெளியிடவுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com