'வணங்கான்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

அருண் விஜய் நடித்த ‘வணங்கான்’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ளது.
'வணங்கான்' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!
Published on

சென்னை,

இயக்குனர் பாலா, அருண் விஜய் நடிப்பில் 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.

அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. தொடக்கத்தில் இதில் சூர்யா நடிக்கவிருந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இதிலிருந்து விலகிய சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்திற்கு தணிக்கைக்குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாதம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com