பாலா படத்தில் அருண் விஜய்

பாலா படத்தில் அருண் விஜய்
Published on

பாலா இயக்கும் `வணங்கான்' படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

தற்போது முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். அடுத்த கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.ஒளிப்பதிவு: ஆர்.பி.குருதேவ்.

X

Daily Thanthi
www.dailythanthi.com