'மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய்..!

நடிகர் அருண் விஜய் 'மிஷன் சாப்டர் 1' திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார்.
'மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய அருண் விஜய்..!
Published on

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை இயக்கி வந்தார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் 'மிஷன் சாப்டர் 1: ஃபியர்லஸ் ஜார்னி' என்று மாற்றப்பட்டது. இந்த படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மிஷன் சாப்டர் 1' படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் தொடங்கியுள்ளார். இதனை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com