'மான் கராத்தே' பட இயக்குனருடன் கை கோர்க்கும் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரின் 36-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
'மான் கராத்தே' பட இயக்குனருடன் கை கோர்க்கும் அருண் விஜய்
Published on

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். தனக்கென கதைகளை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். அவர் நடிப்பில் ஜனவரி மாதம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர்-1 படம் வெளியாகியது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து அருண் விஜய் அடுத்த படம் நடிக்கவிருக்கிறார். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக சித்தி இத்னானி நடிக்கவுள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். படத்தின் இசையை சாம். சி.எஸ் மேற்கொள்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை கையாளுகின்றனர். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் நடந்தது. அதில் பேசிய இயக்குனர் திருக்குமரன் " எப்படி சிவகார்த்திகேயனுக்கு மான் கராத்தே ஒரு திருப்பு முனை படமாக அமைந்ததோ , அதேப் போல் அருண் விஜய்க்கும் ஒரு முக்கியமான படமாக அமையும். இது ஒரு அதிரடி ஆக்சன் படமாக அமையும்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com