அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே'... இன்று டிரைலர் வெளியீடு...!

இந்த படம் வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே'... இன்று டிரைலர் வெளியீடு...!
Published on

சென்னை,

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்துள்ள திரைப்படம் 'அச்சம் என்பது இல்லையே - மிஷன் சாப்டர் 1'. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. ரவி.ஜி, உத்ரா உன்னி கிருஷ்ணன் குரலில் வெளியான 'கண்ணே செல்ல கண்ணே' பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த படம் வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com