

சென்னை,
'மாஸ் பசங்க வெர்சஸ் கிளாஸ் பொண்ணுங்க' என்ற தலைப்பில் சின்னத்திரையில் ஒரு கலகலப்பான போட்டித்தொடரில் இருவரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா தற்போது 'சார்பட்டா பரம்பரை-2, வேட்டுவம்' உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல முன்னணி நடிகையான ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் ஆர்யாவும், ரெஜினா கசாண்ட்ராவும் சின்னத்திரையில் களம் புகுந்துள்ளனர். 'மாஸ் பசங்க வெர்சஸ் கிளாஸ் பொண்ணுங்க' என்ற தலைப்பில் சின்னத்திரையில் ஒரு கலகலப்பான போட்டித்தொடரில் இருவரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஆர்யா கூறும்போது, "எப்போதுமே பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் இடையே நடக்கும் போட்டி சுவாரசியமானது. அதில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது", என்றார். ரெஜினா கூறும்போது, "நிகழ்ச்சியின் தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு என்னவோ இந்த தலைப்பை ஆர்யா தான் சூட்டியிருப்பாரோ... என்ற சந்தேகம் இருக்கிறது", என்று கலகலப்பாக குறிப்பிட்டார்.
முன்னதாக சின்னத்திரைக்கு வந்திருக்கும் ஆர்யா, ரெஜி னாவை 'சரிகமப' நிகழ்ச்சி நடுவர்களான பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் வரவேற்றனர்.