என்னை அடி வெளுத்து வாங்கி விட்டான் ஆர்யா - விஷால்

விஷால், ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘எனிமி’ படம், தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
என்னை அடி வெளுத்து வாங்கி விட்டான் ஆர்யா - விஷால்
Published on

இந்த படவிழாவில் கலந்துகொண்டு விஷால் பேசியதாவது:-

எனிமி படத்தின் மூலம் எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளராக வினோத்குமார் கிடைத்து இருக்கிறார். அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால், ஓ.டி.டி.யில் பெரிய விலைக்கு விற்று இருக்கலாம்.

ரசிகர்களை மகிழ்விக்க படத்தை தியேட்டர்களில் திரையிடுகிறார். அவருடைய தயாரிப்பில், அடுத்து ஒரு படத்தில் நடிக்கிறேன். எனிமி படத்தின் கதையை டைரக்டர் ஆனந்த் சங்கர் என்னிடம் சொன்னபோது, இந்த படத்தில் ஆர்யா இருந்தால் நன்றாக இருக்கும். அவன் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக்கலாம் என்று சொன்னேன். ஆனந்த் சங்கர் அற்புதமான திரைக்கதையுடன் வந்தார்.

ஆர்யாவிடம், உலகமே அழியப்போகிறது என்று சொன்னால் அசராமல், இரு... சைக்கிளிங் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்வான். எதையும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள மாட்டான். இப்போது என்ன ஆச்சு என்று தெரியவில்லை. நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டான்.

இந்த படத்துக்காக ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது, உண்மையிலே குத்துச்சண்டை கற்றுக்கொண்டு வந்து, என்னை அடி வெளுத்து விட்டான். ஆர்யாவுடன் இணைந்து இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வாறு விஷால் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com