”சார்பட்டா பரம்பரை 2” படத்திற்கான அப்டேட் கொடுத்த ஆர்யா

சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளது
”சார்பட்டா பரம்பரை 2” படத்திற்கான அப்டேட் கொடுத்த ஆர்யா
Published on

சென்னை,

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்த படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால், ஒரு சில பிரச்சினையின் காரணமாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்காமல் கிடப்பிடிப்பில் போடப்பட்டிருந்தது. இதற்கிடையில், நடிகர் ஆர்யா பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இதில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்து வந்தாலும், ஆர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கான அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, சார்பட்டா பரம்பரை 2 படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஆர்யா, மஞ்சுவாரியர், கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் படம் வருகிற 17ந் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com