ஆர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நிகில் முரளி இயக்கும் ஆர்யாவின் 40வது திரைப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சர்பட்டா’ இரண்டாம் பாகம், ‘அனந்தன் காடு’ படத்தில் நடித்து வருகிறார்

ஆர்யாவின் 40வது படத்தை நிகில் முரளி இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது. உடற்பயிற்சி கூடத்தில் நடிகைகள் இருவருடனும் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில், நடிகை வைஷ்ணவி சைதன்யா தனது இணைய பக்கத்தில் ஆர்யாவுடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் “சிரிப்பும் அன்பும் நிறைந்த படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் எங்களது புன்னகைகள் நிலைத்திருக்கும்” என்று வைஷ்ணவி சைதன்யா பதிவிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து நிகிலா விமல் தனது பதிவில் “படப்பிடிப்பு நிறைவு. வீட்டிற்கு புறப்பட்டு விட்டேன். விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் ஆர்யா 40 -வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். மேலும் இந்த படத்தை

ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகிய இருவரும் தி ஷோ பீப்பிள் என நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார்கள். இப்படத்தின் டைட்டில் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com