ஆர்யாவின் “அனந்தன் காடு” பட டிரெய்லர் அப்டேட்

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘அனந்தன் காடு’ திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது.
ஆர்யாவின் “அனந்தன் காடு” பட டிரெய்லர் அப்டேட்
Published on

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர்‘மிஸ்டர் எக்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.‘சார்பட்டா’ இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.

ஆர்யாவின் 36வது படமான ‘அனந்தன் காடு’ பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால் சமீபத்தில் வெளியிட்டனர். முக்கிய கதாபாத்திரங்களில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை 'ரன் பேபி ரன்' படத்தை இயக்கிய ஜியென் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார்.எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘அனந்தன் காடு’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வருகிற 25ம் தேதி வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com