ஆர்யா நடிக்கும் “ஹலோ காதல்” படத்தின் 3வது பாடல் வெளியானது

நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா நடிக்கும் ‘ஹலோ காதல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகிறது.
ஆர்யா நடிக்கும் “ஹலோ காதல்” படத்தின் 3வது பாடல் வெளியானது
Published on: 

‘ஹலோ காதல்’ படத்தின் ‘மஜா மஜா’ எனும் பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. நீரஜ் மாதவ், விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை, நீரஜ் மாதவ் மற்றும் செம்வி இணைந்து பாடியுள்ளனர்.

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சர்பட்டா’ இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்

ஆர்யாவின் 40வது படம்

ஆர்யாவின் 40வது படத்தை நிகில் முரளி இயக்குகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகிய இருவரும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது.

படப்பிடிப்பு நிறைவு

ஆர்யா 40 -வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். மேலும் இந்த படத்தை ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகிய இருவரும் தி ஷோ பீப்பிள் என நிறுவனத்தின் மூலம் தயாரித்து உள்ளார்கள். இந்தப் படத்தை நடிகர் ஆர்யா மற்றும் சில்வர் கிரெயின் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துத் தயாரித்துள்ளனர்.

முதல் பாடல் வெளியீடு

‘ஹலோ காதல்’ படத்தின் ‘கண்ணும் கண்ணும்’ எனும் முதல் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இப்பாடலை, பாடகர்கள் கபில் கபிலன் மற்றும் ஷிவாங்கி இணைந்து பாடியுள்ளனர்.

2வது பாடல் வெளியீடு

இந்த நிலையில், ‘ஹலோ காதல்’ படத்தின் ‘நிறைவே… நீயே… ’ எனும் வீடியோ பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை, பாடகர்கள் அஜய் எஸ். காஷ்யப் மற்றும் ரம்யா பட் அபியங்கர் இணைந்து பாடியுள்ளனர்.

டிரெய்லர் வெளியானது

‘ஹலோ காதல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

3வது பாடல் வெளியீடு

இந்த நிலையில், ‘ஹலோ காதல்’ படத்தின் ‘மஜா மஜா’ எனும் பாடல் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. நீரஜ் மாதவ், விஷ்ணு எடவன் எழுதிய இப்பாடலை, பாடகர்கள் நீரஜ் மாதவ் மற்றும் செம்வி இணைந்து பாடியுள்ளனர்.

X