ஆர்யாவின் புகைப்படத்திற்கு மனைவி சாயிஷா போட்ட கமெண்ட் - வைரல்

நடிகர் ஆர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு, "மனைவியின் பேச்சை கேளுங்கள்" என அவரது மனைவி சாயிஷா கமெண்ட் செய்து கலாய்த்துள்ளார். நடிகர் ஆர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதுபோல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "உங்களுக்கு சந்தேகம் வரும் பொழுது அதற்கான சிறந்த இடம் ஜிம்" என பதிவிட்டு இருந்தார். அதற்கு ''உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மனைவியின் பேச்சை கேளுங்கள்" என அவரது மனைவி சாயிஷா கமெண்ட் செய்தது வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story






