

திருவனந்தபுரம்,
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கருப்பு படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, "கடந்த 5 ஆண்டுகளில் நான் நடித்த படங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமான படம். முதல் பாதி உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இருக்கும். இரண்டாம் பாதி முழுக்க தியேட்டர் மொமென்ட்ஸால் நிரம்பி இருக்கும். மே 14ஆம் தேதி மீண்டும் உங்கள் அன்பை பெறுவோம் என்று நம்புகிறேன்.
நான் சந்தோஷமாக இருக்கணும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நானும் நீங்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருக்கணும் என்று ஆசைப்படுகிறேன். ஒரு அண்ணனாக சொல்கிறேன் இந்த வயதை மிஸ் பண்ணாதீங்க. பெரிய கனவு காணுங்கள் எல்லாமே நிச்சயம் நனவாகும்." என கருப்பு பட விழாவில் பேசினார்.