"சொன்னபடி படம் செமையா ரிலீஸ் ஆகும்" -'கருப்பு' பட விழாவில் ஆர்.ஜே பாலாஜி பேச்சு

சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
"சொன்னபடி படம் செமையா ரிலீஸ் ஆகும்" -'கருப்பு' பட விழாவில் ஆர்.ஜே பாலாஜி பேச்சு
Published on

மதுரை,

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கருப்பு திரைப்படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அதேவேளை, கருப்பு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அந்த விழாவில், இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து பேசினார். அதாவது, "சூர்யா ரசிகர்கள் கண்ணியமாக கட்டுக்கோப்பாக இருப்பது நன்றாக இருக்கிறது.. சூர்யா ரொம்ப நல்லவர் அவருக்கு இன்னும் நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். திரிஷாவாக இருக்கிறது ரொம்ப கஷ்டம் அது திரிஷாவுக்கு மட்டுமே தெரியும்.. வலிமை படத்தை விட கருப்பு படத்திற்கு தான் அதிக அப்டேட்டை கேட்டுள்ளீர்கள் தேதி அறிவித்தால் சென்சார் போர்டில் ஒரு குத்து குத்துறாங்க ஆனா சொன்னபடி படம் செமையா ரிலீஸ் ஆகும்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com