மறைந்த பாடகி ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடல் வீடியோ வெளியானது

திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால கடந்த ஏப்ரல் 12ம் தேதி காலமானார்.
மறைந்த பாடகி ஆஷா போஸ்லே பாடிய கடைசி பாடல் வீடியோ வெளியானது
Published on

மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே கடைசியாக பாடிய திரைப்பட பாடல் அவரது பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியாகியுள்ளது.

திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி காலமானார்.

1943-ல் தனது இசை பயணத்தை தொடங்கிய ஆஷா போஸ்லே, தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தாதாசாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

கடைசி பாடல் வெளியானது

இந்த நிலையில், ஹரிஷ் வியாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம் கா ஹரி’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடகி ஆஷா போஸ்லே ‘ஆ மேரி ஜிந்தகி, டு சுபி ஹாய் கஹாந்’ என்ற பாடலை கடைசியாக பாடியிருந்தார்.

மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே கடைசியாக பாடிய திரைப்பட பாடல் அவரது பிறந்தநாளை ஒட்டி இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் கடந்த 2023ம் ஆண்டிலே ஆஷா போஸ்லே குரலில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com