‘பத்மாவத்’ உடைகளை கேட்கும் தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே வாழ்க்கையில் மறக்க முடியாத படம் பத்மாவத். சித்தூர் ராணியாக நடித்து இருந்தார். இந்த படம் திரைக்கு வந்த போது பெரிய சர்ச்சைகளில் சிக்கியது.
‘பத்மாவத்’ உடைகளை கேட்கும் தீபிகா படுகோனே
Published on

தீபிகா படுகோனே தலைக்கு விலையும் நிர்ணயித்து திரையுலகை அதிர வைத்தனர். எதிர்ப்புகளை மீறி படம் திரைக்கு வந்து அமோக வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை நிகழ்த்தியது.

இந்த படத்தில் தீபிகா படுகோனே அணிந்த உடைகளும் நகைகளும் பாராட்டுகளை பெற்றன. குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. இந்த நிலையில் படத்தில் அணிந்த உடைகளை நினைவு பொருளாக வைத்துக்கொள்ள தன்னிடம் தந்து விடும்படி படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தீபிகா படுகோனே வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது.

பத்மாவத் எனக்கு முக்கிய படம். அதில் நான் அணிந்திருந்த நகைகள், உடைகளில் பெண்களும், ரசிகர்களும் மனதை பறிகொடுத்தனர். நான் எங்கு போனாலும் அந்த உடைகள், நகைகள் பற்றியே பேசினார்கள். குறிப்பாக கிளைமாக்சில் தீயில் குதித்து இறக்கும்போது நான் அணிந்திருந்த உடைகளும் என் முகபாவனைகளும் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.

ரசிகர்களைபோல் நானும் கிளைமாக்சில் அணிந்த உடைகள் மீது எனது மனதை பறிகொடுத்து இருக்கிறேன். எனவே அவற்றை என்னுடனேயே நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அந்த உடைகளை தனக்கு தரும்படி டைரக்டரிடம் கேட்டு இருக்கிறேன். இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com