ரூ.3,572 கோடி சொத்து மதிப்பு! தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா?


ரூ.3,572 கோடி சொத்து மதிப்பு! தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா?
x

சமீபகாலமாக தென்னிந்திய நடிகர்களின் சம்பளமும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை,

வெள்ளித்திரை நடிகர்களுக்கு பெரும் புகழ் மட்டுமா பல கோடிகளில் சம்பளமும் கிடைக்கிறது. இந்தியாவில் மிகவும் பணக்காரர் நடிகராக ஷாருக்கான் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ 7 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது இடத்தில் ஜுஹி சாவ்லா உள்ளார். இவரது சொத்து மதிப்பு 4 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதாம்.

பாலிவுட்டை தவிர்த்து தென்னிந்தியாவில் அதிக சொத்து வைத்துள்ள நடிகர் யாராக இருக்கும் என்ற விவாதம் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் எழுவதை பார்க்க முடிகிறது. சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் படங்கள் பாலிவுட் படங்களையே காலி செய்யும் அளவுக்கு வசூலை வாரி குவிக்கிறது. இதனால், தென்னிந்திய நடிகர்களின் சம்பளமும் பலமடங்கு அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகர்களுக்கு நிகராக சில தென்னிந்திய நடிகர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிலும் தென்னிந்தியாவின் மிக பணக்கார நடிகராக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா உள்ளாராம். அவரது சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 3,572 கோடி என கூறப்படுகிறது.

தெலுங்கு திரையுலகில் 'சிவா' படத்தின் மூலம் அறிமுகமான இவர், 70-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'ரட்சகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பரிட்சயமாக உள்ளார். ரசிகர்களிடம் தனக்கென ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார். 65 வயதான நாகர்ஜுனா, இன்னும் படங்களில் பிசியாக இருப்பதும், பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளராகவும் உள்ளார். நாகார்ஜுனாவிற்கு அடுத்த வரிசையில் அதிக சொத்துக்கள் வைத்து இருக்கும் தென்னிந்திய நடிகராக சிரஞ்சீவி உள்ளார். இவரது சொத்துமதிப்பு ரூ.1,650 கோடியாகும்.

நாகர்ஜுனாவிற்கு சினிமாவில் மட்டும் இன்றி அவர் வைத்துள்ள தொழில் நிறுவனங்களில் இருந்து வருமானம் கொட்டுகிறது. ரியல் எஸ்டேட், அன்னபூர்னா ஸ்டூடியோஸ் உள்ளிட்டவை மூலமாகவும் நாகர்ஜுனாவிற்கு வருவாய் கிடைக்கிறது. நாகர்ஜுனாவிடம் சொந்தமாக ஒரு ஜெட் மற்றும் 6 க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் உள்ளன. இந்த தகவல்களை முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story