கேரவனுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டையை கழற்றிய உதவி இயக்குனர் - காஜல் அகர்வால் பகிர்ந்த கசப்பான அனுபவம்

பொது இடங்களில் கூட சில ரசிகர்கள் எல்லை மீறிய அன்பை காட்டும் விதம் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
காஜல் அகர்வால் பகிர்ந்த கசப்பான அனுபவம்
Published on

சென்னை,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து காஜல் அகர்வால் கூறும்போது. "நான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவம் இது. முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த படத்தின் உதவி இயக்குனர் என் அனுமதி இல்லாமலேயே அத்துமீறி நான் இருந்த கேரவனுக்குள் வந்துவிட்டார். திடீரென்று தனது சட்டையை கழற்றி தன் இதயத்தின் மீது இருக்கும் எனது பெயரோடு கூடிய டாட்டுவை காட்டினார். யாரும் இல்லாத சமயத்தில் அவர் அப்படி செய்ததால் நான் மிகவும் பயந்து விட்டேன்.

என் மீது அவர் வைத்திருக்கும் அன்பு பச்சை குத்தியதன் மூலம் அவர் வெளிப்படுத்தியது ஆனந்தமாக இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்த விதம் சரியல்ல. வெளிப்படுத்திய விதமும் சரியல்ல என்று மென்மையாக எச்சரித்தேன்.

அவர் கேரவனுக்குள் நுழைந்து சட்டையை கழற்றியதும் என் இதயத்தில் ஏற்பட்ட படபடப்பு அடங்க வெகுநேரம் பிடித்தது. பொது இடங்களில் கூட சில ரசிகர்கள் எல்லை மீறிய அன்பை காட்டும் விதம் சங்கடத்தை ஏற்படுத்தும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com