எம்மி விருது வென்ற இளம் நடிகர்...வரலாறு படைத்த 15 வயது சிறுவன்

'அடோல்சென்ஸ்' இணையத் தொடரில் நடித்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பர்.
சென்னை,
15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொடர்களுக்கான எம்மி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது
இதில் 'அடோல்சென்ஸ்' இணையத் தொடரில் நடித்த 15 வயது சிறுவனான ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை வென்று கவனம் ஈர்த்துள்ளார். இதன் மூலம் இந்த விருதை வென்ற இளம் ஆண் நடிகர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
''ஹேக்ஸ்'' ஹொடரில் நடித்த சேத் ரோஜென் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் வென்றனர். சிறந்த துணை நடிகைக்கான விருதை ஹன்னா ஐன்பிண்டர் வென்றுள்ளார்.
Related Tags :
Next Story






