“சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது” -நடிகை அனுபமா

பட உலகில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகைகள் தைரியமாக பேச ஆரம்பித்து உள்ளனர். ஸ்ரீரெட்டி படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலையே வெளியிட்டார்.
“சினிமாவில் பாலியல் தொல்லை இருக்கிறது” -நடிகை அனுபமா
Published on

இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் செக்ஸ் புகாரில் சிக்கி உள்ளனர்.

இப்போது நடிகை அனுபமா பரமேஸ்வரனும் சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக கூறியுள்ளார். இவர் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தவர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கன்னட படத்திலும் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மைதான். ஆனாலும் நான் அதில் சிக்கவில்லை. அதுமாதிரியான பிரச்சினைகள் இப்போதுவரை எனக்கு ஏற்படவில்லை. திரைப்படங்களில் நடிக்க நிறைய புதுமுக நடிகைகள் வருகிறார்கள். அவர்கள்தான் இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை சந்திக்க நேர்கிறது.

பாலியல் தொல்லைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதுவரை அவற்றை தடுக்க முடியாது என்பது எனது கருத்து. என்னை சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்மீது அன்பு செலுத்துகிறார்கள். மரியாதையும் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்கும் வரை எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.

மாடர்னாக இருப்பதிலும், குட்டை பாவாடை அணிவதிலும் அழகு இல்லை. திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதில்தான் அழகு இருக்கிறது. சினிமா துறையில் நடிகைகளுக்குள் போட்டி இருக்க வேண்டும். அதுதான் நடிகைகளுக்கான சிறந்த ஊக்க சக்தி. இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com