'எஸ்கே 25' படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் ஸ்பெஷலானது - சிவகார்த்திகேயன்


எஸ்கே 25 படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் ஸ்பெஷலானது - சிவகார்த்திகேயன்
x

'நேசிப்பாயா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் 'எஸ்கே 2' படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

சென்னை,

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நேசிப்பாயா'. இந்த படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாக்கி இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி வெளியாக உள்ளது.

'நேசிப்பாயா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கி வரும் 'எஸ்கே 25' படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது, "இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு நிகராக அதர்வாவின் கதாபாத்திரமும் எனக்கு பிடிக்கும்.

நாங்கள் இன்னும் இணைந்து நடிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த படத்தில் அதர்வாவின் கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப ஸ்பெஷலானது. இந்த படத்தில் நடிப்பதால் எல்லோரும் உங்களைப் பற்றி பெருமைப்படுவார்கள்" என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story