அதிகத்தூர் கிராமத்தை ஓட்டுக்காக தத்தெடுக்கவில்லை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்

அதிகத்தூர் கிராமத்தை ஓட்டுக்காக தத்தெடுக்கவில்லை என கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார் #KamalHassan #MakkalNeedhiMaiam
அதிகத்தூர் கிராமத்தை ஓட்டுக்காக தத்தெடுக்கவில்லை - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்
Published on

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூரில் கிராமசபைக் கூட்டத்தில் கமல் பங்கேற்றுள்ளார். கமல் வருவதற்கு முன்பாகவே கிராமசபைக் கூட்டத்தை அதிகாரிகள் முடித்தனர். அதிகாரிகள் சென்ற பிறகு கிராம மக்களுடன் கமல்ஹாசன் பேசி வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி அதிகத்தூர் கிராமத்தை தத்தெடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு பொதுமக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

எங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்பதற்காக நாங்கள் கிராமங்களுக்கு உதவவில்லை. மக்களின் ஆதரவு இருந்தால் 12 ஆயிரம் கிராமங்களை எங்களால் தத்தெடுக்க முடியும்.

அதிகத்தூர் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். அதிகத்தூர் அரசுப் பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித் தரப்படும்.

அதிகத்தூரில் 100 கழிப்பறைகள் கட்டித்தரப்படும். அதிகத்தூரில் நீர் சேகரிக்கும் வழிகள் ஏற்படுத்தி தரப்படும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com