

சென்னை,
ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நசிரியா போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று ப்ளாக்பஸ்டர் படத்தை இயக்கினார். மக்கள் இப்படங்களை கொண்டாடி மகிழ்ந்தனர். அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் படத்தை இயக்கினார். நயன் தாரா, தீபிகா படுகோனே, பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர்.
இந்திய சினிமாவில் மிக அதீக வசூலை பெறப்பட்ட பட்டியலில் 5 ஆவது இடத்தை ஜவான் பிடித்தது. இதுவரை 1,200 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக அட்லீ, புஷ்பா நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா அல்லது திரிஷா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
இந்தி சினிமாவில் ஒரு இமாலய வெற்றியை தொடர்ந்து டோலிவுட்டில் கால் பதிக்கும் அட்லீ அல்லு இதனால் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தின் அதீகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.