

சென்னை,
'கூழாங்கல்' திரைப்படத்தை உருவாக்கிய லெர்ன் அண்ட் டீச் புரொடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்தை தயாரித்து உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடந்ததாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்த்தா எம்.ஏ. படத்தொகுப்பு செய்கிறார். 'ஜமா' திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 2) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.