பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கும் 'அவதார் 3' பட வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கும் 'அவதார் 3' பட வசூல்.. எவ்வளவு தெரியுமா?
Published on

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் அவதார்: தி வே ஆப் வாட்டர் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.

அவதார் படத்தின் மூன்றாம் பாகமான அவதார்: பயர் அண்ட் ஆஷ் படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்களை பெரிதாக திருப்தி படுத்தவில்லை என்ற கருத்து கூறப்படுகிறது. ஆனாலும் இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இப்படம் 5 நாட்களில் ரூ. 4000 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com