மீண்டும் வசூல் அள்ளும் அவதார்

4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து மீண்டும் அவதார் சாதனை நிகழ்த்தி உள்ளது.
மீண்டும் வசூல் அள்ளும் அவதார்
Published on

டைட்டானிக் படம் மூலம் புகழ்பெற்ற ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியான அவதார் படம் ஆச்சரியமான கற்பனை உலகம் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளால் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் நிகழ்த்தியது. இதில் சாம் வொர்த்திங்டன், ஜோ சல்தானா. ஸ்டீபன் லாங் உள்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் அடுத்த பாகம் 'அவதார் தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் 160-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைக்கு வர உள்ளது. அந்த படம் வருவதற்கு முன்பாக அவதார் படத்தை நவீன உயர்தர தொழில் நுட்பத்தில் புதுப்பித்து 4 கே தரத்திலும் 3-டி நுட்பத்திலும் உலகம் முழுவதும் கடந்த 23-ந்தேதி மீண்டும் திரையிட்டனர். மறு வெளியீட்டிலும் படத்துக்கு மவுசு குறையவில்லை. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.7 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com