மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' கடைசி டிரெய்லர்

இந்தியாவில் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் டிசம்பர் 17-ந்தேதி வெளியாக உள்ளது.
மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' கடைசி டிரெய்லர்
Published on: 

'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் கடைசி டிரெய்லர் வெளியாகி உள்ளது.

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'. கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ரெபேக்கா ரோமிஜின் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ரிலீஸ்தேதி

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்துக்குப் பிறகு ரூசோ சகோதரர்கள் மீண்டும் மார்வெல் படத்தை இயக்குகின்றனர். உலகளவில் வருகிற டிசம்பர் 18-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ஒருநாள் முன்கூட்டியே டிசம்பர் 17-ல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

டாக்டர் டூம்

மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 'அயர்ன் மேன்' கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் இந்த படத்தில் 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடைசி டிரெய்லர்

ஏற்கெனவே இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் கடைசி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரில் ஸ்டீவ் ரோஜர்ஸ்க்கு (கேப்டன் அமெரிக்கா) மகன் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. டிரெய்லர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X