அட்வான்ஸ் புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’... இத்தனை கோடியா?

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படம் வெளியாக இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

அட்வான்ஸ் புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’... இத்தனை கோடியா?
Published on

படம் வெளியாக இன்னும் சுமார் 4 மாதங்கள் உள்ள நிலையில், அதன் அட்வான்ஸ் டிக்கெட் விற்பனை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படம் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’. ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 18, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ.950 கோடி?

படம் வெளியாக இன்னும் சுமார் 4 மாதங்கள் உள்ள நிலையில், அதன் அட்வான்ஸ் டிக்கெட் விற்பனை மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, அட்வான்ஸ் புக்கிங்கில் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.950 கோடி என கணக்கிடப்படுகிறது.

முன்னதாகவே டிக்கெட் விற்பனையைத் தொடங்கியிருப்பது படத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

முதல் வார இறுதியில் ரூ.9,500 கோடி?

அட்வான்ஸ் புக்கிங்கில் கிடைத்துள்ள வரவேற்பை அடிப்படையாக வைத்து, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உலகளவில் முதல் வார இறுதியில் சுமார் ரூ.9,500 கோடி வசூலை எட்டும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com