வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அவிகா கோர்

அவிகா கோர் தனது காதலர் மிலிந்த் சந்த்வானியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சென்னை,
தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு நடிகை அவிகா கோர் பதிலளித்துள்ளார். இந்தச் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், இப்படிப்பட்ட பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவிகா கோர், “கர்ப்பம் தொடர்பான வதந்திகள் அனைத்தும் முற்றிலும் போலியானவை. அப்படி எதுவும் இல்லை. ஆனால் இன்னொரு செய்தி இருக்கிறது. அது என்ன என்பதை விரைவில் உங்களுக்குச் சொல்வோம்,” என்று கூறினார். அவரது இந்த கருத்து, அவர் அறிவிக்கவிருக்கும் நல்ல செய்தி என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அவிகா கோர் தனது காதலர் மிலிந்த் சந்த்வானியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நடிகை அவிகா கோர், கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ''பாலிகா வது'' என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். அதில் ஆனந்தி வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.






