'இரவின் நிழல்' படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது: பார்த்திபன் மகிழ்ச்சி

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது
'இரவின் நிழல்' படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு விருது: பார்த்திபன் மகிழ்ச்சி
Published on

பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெறும் 'மாயவா... சாயவா...' பாடலை பாடிய பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து அந்தப் படத்தை இயக்கி நடித்த பார்த்திபன் கூறியதாவது:-

நிலவில் சந்திரயான்-3 கால் பதித்ததன் மூலம் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். அந்த வகையில் தேசிய விருது பெற்ற இந்த பாடல் கிடைக்க காரணமான விஞ்ஞானி ஏ.ஆர்.ரகுமான்தான். இந்த பின்னணியில் நானும் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

இந்த படம் நிறைய விருதுகளை பெற்றிருந்தாலும், தேசிய விருது பெறுமா? என்று ஏக்கத்துடன் காத்திருந்தோம். அந்த வகையில் எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. எனது படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கிறோம். பொதுவாகவே விருதுகள் அறிவிக்கும் போது விமர்சனங்களும் வருவது வழக்கம். அந்த விமர்சனங்களுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. வரும் காலங்களில் தேசிய விருது பட்டியலில் நிறைய தமிழ் படங்கள் இடம்பெற வேண்டும். அதில் எனது படங்களும் இடம்பெற வேண்டும். அதை நோக்கியே எனது பயணம் இருக்கும்.

இவ்வாறு பார்த்திபன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com