கலைஞர்களுக்கு விருதுகளே அடையாளம்- நடிகை கீதா கைலாசம்

ஜாக்கெட் அணியாத கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் கீதா கைலாசத்திற்கு சிறந்த நடிகைக்கான 'காய்ப்' சினிமா விருது வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர்களுக்கு விருதுகளே அடையாளம்- நடிகை கீதா கைலாசம்
Published on

இயக்குனர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் 'அங்கம்மாள்' படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் ஜாக்கெட் அணியாத கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான 'காய்ப்' சினிமா விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை வினோத் ஜெயராமன் வழங்கினார். மேலும் 'அங்கம்மாள்' படத்துக்கு சிறந்த கதைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த நடிகர் விருது 'நாங்கள்' படத்தில் நடித்த அப்துல் ரபேவுக்கு கிடைத்தது.

இதுகுறித்து கீதா கைலாசம் கூறும்போது, "திரை பிரபலங்களுக்கு விருதுகளும், ரசிகர்களின் பாராட்டுகளும் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும். கலைஞர்களுக்கு விருதுகளே அடையாளம். அது இன்னும் நம்மை முன்னோக்கி செல்ல உந்தப்படும் சக்தியாக திகழ்கிறது". என்றார்.

'ரெட்ரோ', 'பைசன்', 'காந்தா', 'நாங்கள்', 'பேட் கேர்ள்', 'காதல் என்பது பொதுவுடைமை', 'டூரிஸ்ட் பேமிலி', 'வீர தீர சூரன்' படங்கள் விருது பட்டியலில் இடம்பெற்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com