'அயலான்' திரைப்படம் ரூ.75 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
'அயலான்' திரைப்படம் ரூ.75 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
Published on

சென்னை,

ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அயலான்' தான். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் 'அயலான்' திரைப்படம் நேற்று வரை உலகம் முழுவதும் ரூ.75 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com