துபாயில் 'அயலான்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா...!

'அயலான்' படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
துபாயில் 'அயலான்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா...!
Published on: 

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. மேலும் படத்தின் டிரெய்லர் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா துபாயில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 5-ம் தேதி படத்தின் டிரெய்லர் துபாயில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com