'வார் 2' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர்


Ayan Mukerji shares War 2 BTS pics: Hrithik, Jr NTR bring drama, depth, star power
x

ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வார் 2.

மும்பை,

'வார் 2' படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை இயக்குனர் அயன் முகர்ஜி பகிர்ந்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர், ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'வார் 2'. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் தாயாரிக்கும் இப்படத்தை 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார்.

சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதே நாளில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படமும் வெளியாக இருப்பதால் இரு படங்களின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் அயன் முகர்ஜி, 'வார் 2' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனுடன், சில உருக்கமான பதிவுகளையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

1 More update

Next Story