"ஆசாதி" படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்

ஜோஜு ஜார்ஜ் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாஸி நடித்துள்ள'ஆசாதி' படம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது.
"ஆசாதி" படத்திற்கு "யு/ஏ" தணிக்கை சான்றிதழ்
Published on

சென்னை,

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீநாத் பாசி.

இவர் தற்போது மருத்துவம் தொடர்பான திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ஆசாதி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஜோஜு ஜார்ஜ் இயக்கியுள்ளார். இதில் விஜயகுமார், ரவீனா ரவி, டிஜி ரவி, ராஜேஷ் சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர். லிட்டில் க்ரூ புரொடக்ஷன் சார்பில் பைசல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார்.

திரில்லர் கதையில் உருவாகி உள்ள இப்படம் வருகிற 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில் 'ஆசாதி' படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com