

பாகுபலி வெற்றியை தொடர்ந்து ’பாகுபலி 2’ திரைப்படம் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியானது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ’பாகுபலி 2’ திரைப்படத்தில் பிரபாஸ், ரானா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
250 கோடி பட்ஜெட்டில் உருவான ’பாகுபலி 2’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் சுமார் 1 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ’பாகுபலி 2’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ’பாகுபலி 2’ திரைப்படத்தின் காட்சிகள், புகைப்படங்கள், பாடல்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.